14 நில அபகரிப்பு வழக்குகளுக்கு தீர்வு


14 நில அபகரிப்பு  வழக்குகளுக்கு தீர்வு
x

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 14 நில அபகரிப்பு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், உதவி கலெக்டர் தமிழரசி, தாசில்தார் பகவதிபெருமாள் மற்றும் துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான வழக்குகளின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.


Next Story