சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 141 வழக்குகளுக்கு சமரச தீர்வு


சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 141 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 141 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சேலம்

மக்கள் நீதிமன்றம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் வரவேற்றார். மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து, தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் உள்ளிட்டவை எடுத்து கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 7 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

141 வழக்குகளுக்கு தீர்வு

விபத்து ஒன்றில் காலை இழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ.29 லட்சத்து 25 ஆயிரத்து 202-யை இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. தீர்வு தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 383 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன.

இதில் 141 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் ரூ.8 கோடியே 24 லட்சத்து 14 ஆயிரத்து 362 தீர்வு தொகையாக பெறப்பட்டது.


Next Story