தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 206 வழக்குகளுக்கு தீர்வு
பாபநாசத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தஞ்சாவூர்
பாபநாசம்:
பாபநாசம் கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும்,மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் உரிமையியல், குடும்ப வன்முறை வழக்குகள் உள்பட மொத்தம் 411 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், போலீசார்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story