ஜமாபந்தியில் 207 மனுக்களுக்கு தீர்வு


ஜமாபந்தியில் 207 மனுக்களுக்கு தீர்வு
x

ஜமாபந்தியில் 207 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் வெங்கலம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய வருவாய் கோட்டத்திற்கான ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 466 மனுக்கள் பெறப்பட்டு, 207 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 237 மனுக்கள் விசாரணையில் உள்ளன. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜமாபந்தியின் நிறைவாக குடிகள் மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டு பேசினார். வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த மாநாட்டில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சமூகநல தாசில்தார் சித்ரா நன்றி கூறினார்.


Next Story