தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 264 வழக்குகளுக்கு தீர்வு
கும்பகோணம், திருவிடைமருதூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கும்பகோணம், திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது. கும்பகோணம் கோர்ட்டில் 2 அமர்வுகள் நடந்தது.
இதில் முதல் அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவ சக்திவேல் கண்ணன் தலைமையில் வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல்கள் மோகன்ராஜ், சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர். 2-வது அமர்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு தலைமையில் வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல்கள் செந்தில்குமார், மங்களம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர்
இதேபோல் திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்ற அமர்வில் மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவப்பழனி, வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல்கள் மாதவன், பூமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 948 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
இதில் 264 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 ஆயிரத்து 141 வசூல் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் இளநிலை உதவியாளர் ராஜேஷ்குமார், தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், பாஸ்கரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.