27 மனுக்களுக்கு பெட்டிசன் மேளாவில் தீர்வு
போலீஸ் நிலையங்களில் தீர்வாகாத 27 மனுக்களுக்கு பெட்டிசன் மேளாவில் தீர்வு
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பெட்டிசன் மேளா நடந்து வருகிறது. அதன் படி நேற்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெட்டிசன் மேளா நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீஸ் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் 27 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் இடத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்புடைய மனுக்களுக்கு கோர்ட்டுக்கு சென்று தீர்வு காண அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story