மக்கள் நீதிமன்றத்தில் 35 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 35 வழக்குகளுக்கு தீர்வு
x

பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மணி, வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் சத்தியா, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அழகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் 195 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.34 லட்சத்து 12 ஆயிரத்து 740 வசூல் செய்யப்பட்டது. ஒரு ஆண்டுக்கு மேல் நிலுவையில் இருந்து வந்த குடும்ப நல வழக்கு சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை வக்கீல்கள் சங்கத் தலைவர் மாஸ்கோ மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணியாளர் மணிகண்டன் செய்து இருந்தார்.


Next Story