மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு
x

பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீீர்வு காணப்பட்டு ரூ.1½ கோடி வசூல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீீர்வு காணப்பட்டு ரூ.1½ கோடி வசூல் செய்யப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் குழு தலைவரும், பட்டுக்கோட்டை சார்பு நீதிபதியுமான ஏ.பாலகிருஷ்ணன் தலைமையில் பட்டுக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி டி.வி.மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் கே.சத்யா, பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் என்.அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

354 வழக்குகளுக்கு தீர்வு

இதில் வக்கீல் சங்க தலைவர் மாஸ்கோ, செயலாளர் அண்ணாதுரை, வக்கீல்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நான்கு அமர்வாக பிரிக்கப்பட்டு 941 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் ரூ.1 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 35 வசூல் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த குடும்பநல வழக்கு, மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு வழக்குகள் மற்றும் காசோலை வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக உதவியாளர் பிரசன்னா, நரேஷ் குமார், மணிகண்டன், வட்டசட்டபணிகள் குழு, நீதிமன்ற ஊழியர்கள், செய்திருந்தனர்.


Next Story