தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 479 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 479 வழக்குகளுக்கு தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 479 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மதுசூதனன் ஆணைப்படியும், சார்பு நீதிபதி சுதா அறிவுரையின் பேரிலும் கும்பகோணம்,

திருவிடைமருதூர் கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த முகாமில் விரைவு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு, வட்ட சட்டப்பணிகள் குழு வக்கீல் செந்தில்குமார், கும்பகோணம் வட்ட சட்டப்பணிகள்

குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா தலைமையில் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசப்பெருமாள், கூடுதல் மாவட்ட உரிமையியல் ரஞ்சிதா ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் திருவிடைமருதூரில் நடந்த முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி தலைமையில், கும்பகோணம்

நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், வட்ட சட்டப்பணிகள் குழு வக்கீல் ரகுவீரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் 809 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 479 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 899 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் கோர்ட்டு அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story