தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 570 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 570 வழக்குகளுக்கு தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 570 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தலைமை தாங்கினார்.

இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குடும்ப நல நீதிபதி தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் (பொறுப்பு), சார்பு நீதிபதியுமான அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஸ்வர், நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதா சேகர், வேப்பந்தட்டை உரிமையியல் நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம், குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவர் கவிதா அகியோர் கொண்ட 6 அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது.

570 வழக்குகள்

இதில் 11 வங்கி வழக்குகள் ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கும், 14 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்துக்கும், 5 சிவில் வழக்குகள் ரூ.25 லட்சத்து 20 ஆயிரத்து 755-க்கும், 538 சிறு குற்றவியல் வழக்குகள் ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 132-க்கும், 2 காசோலை வழக்குகள் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் என மொத்தம் 570 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரத்து 87-க்கு தீர்வு காணப்பட்டது.

தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல்கள், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story