திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் பா.ஜ.க. சார்பில் நடந்தது


திட்டக்குடி  நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்  பா.ஜ.க. சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது.

கடலூர்

திட்டக்குடி

திட்டக்குடி நகராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவை தொகை வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திட்டக்குடி நகர தலைவர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் தாசில்தார் அண்ணாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் வேல்முருகன், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சிவா, முன்னாள் மாநில செயலாளர் பெரியசாமி, விவசாய அணி நகர தலைவர் ராஜராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களிடம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, நகராட்சி ஆணையர் ஆண்டவர் ஆகியோர் பேச்சவார்த்தை நடத்தினர். அப்போது ஆணையர் ஆண்டவர், ஒரு வாரத்தில் அனைத்து பயனாளிகளின் பட்டியலையும் வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து, ஒரு மாதத்தில் நிலுவைத்தொகை வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story