சாலையில் ஓடும் கழிவுநீர்


சாலையில் ஓடும் கழிவுநீர்
x

சாலையில் ஓடும் கழிவுநீர்

திருப்பூர்

உடுமலை,

உடுமலை கச்சேரி வீதியில் பாபுகான் வீதி சந்திப்பு பகுதியில் உள்ள பாதாளசாக்கடை திட்ட ஆழ் நுழை இறங்குகுழி தொட்டியின் மூடி பழுதடைந்தது.இதனால் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீதியில் ஓடியது.அந்த கழிவுநீர் அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தேங்கி நின்றது.அதனால் பொதுமக்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதால், இந்த இடம் உள்ளிட்டு, இதுபோன்ற இடங்களில் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story