ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து ேராட்டில் ஓடும் கழிவுநீர்; நோய் பரவும் அபாயம்


ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து ேராட்டில் ஓடும் கழிவுநீர்; நோய் பரவும் அபாயம்
x

ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடைப்பு

ஈரோடு சத்தி ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சத்தி ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதனால் இங்கு வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இங்கு சுவஸ்திக் கார்னர் பகுதியில் சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் இருக்க பாதாள சாக்கடை தரைமட்ட தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதாள சாக்கடை தொட்டியில் நேற்று உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது. இதன்காரணமாக அங்கு துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. இதனால் அங்கு சிக்னலுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகள் முகம் சுழித்து சென்றனர். மேலும் சாலையோரங்களில் கடைவைத்து இருப்பவர்களும், அந்தவழியாக நடந்து செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் காலை நேரங்களில் அந்த பகுதியில் சாலையோரமாக காய்கறி, கீரை, பழங்கள் கடை வைத்து தொழில் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

டெங்கு காய்ச்சல்

மாநகராட்சி சார்பில் 'டெங்கு' விழிப்புணர்வு வாரம் நேற்றுமுன்தினம் தான் கடைபிடிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பொதுமக்கள் அதிகம் சென்று வரும் பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'போக்குவரத்து நெரிசல் மிகுந்த சுவஸ்திக் கார்னர் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகள் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். கழிவுநீரில் இருந்து கொசு, ஈ போன்றவை உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்து, கழிவுநீர் வெளியேறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story