நீர்வரத்து ஓடைகளில் கலக்கும் கழிவுநீர்


நீர்வரத்து ஓடைகளில் கலக்கும் கழிவுநீர்
x

வத்திராயிருப்பில் நீர்வரத்து ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் நீர்வரத்து ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து ஓடை

வத்திராயிருப்பில் இருந்து மகாராஜபுரம் செல்லும் சாலையில் வீராகசமுத்திரம் நீர்வரத்து ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழை காலங்களில் வரும் தண்ணீர் இப்பகுதியிலுள்ள வீராகசமுத்திரம், வில்வராயன் குளம் கண்மாய்க்கு செல்லும். ஆனால் தற்போது இந்த ஓடையில் வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள கழிவுநீர் கலக்கிறது.

மேலும் நகர்ப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக்கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் உள்ளது.

தூர்வார வேண்டும்

மேலும் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் அள்ளப்படும் கழிவுநீர் கால்வாயில் உள்ள கழிவுகளை இந்த நீர்வரத்து ஓடை அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே இந்த ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஓடையை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story