கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா
x

சேரன்மாதேவியில் ரூ.41 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி படுகை நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் தலைமையில் நடந்தது. தி.மு.க நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில், சேரன்மாதேவி பேரூராட்சிக்குட்பட்ட 11 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி படுகை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story