கோடை சீசன் நேரத்தில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு-சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அதிருப்தி


கோடை சீசன் நேரத்தில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு-சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அதிருப்தி
x
தினத்தந்தி 10 May 2023 6:00 AM IST (Updated: 10 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

கோடை சீசன் நேரத்தில் கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

கோடை சீசன் நேரத்தில் கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோடை சீசன்

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், அக்டோபரில் இரண்டாவது சீசனும் நடக்கிறது. இந்த ஆண்டு கோடை சீசன் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கியது. வழக்கமாக தமிழகத்தின் சமவெளி பகுதியில் வெயில் சுட்டெரிக்கும். அப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் ஊட்டிக்கு வரும். ஆனால் தற்போது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் குன்னூரில் இருந்து கோத்தகிரி சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஊட்டியில் பகல் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்

அப்படி இருந்தும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஊட்டி நகருக்குள்ளும் ஒரு சில இடங்களில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை சீசன் உச்சத்தில் உள்ள தற்போதைய நிலையில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு சில முக்கிய சாலைகளில் தற்போது கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோன்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

கேசினோ சந்திப்பில் இருந்து அலங்கார் தியேட்டர் சந்திப்பு செல்லும் சாலையில்கணேஷ் தியேட்டர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மணிக்கூண்டு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கமர்சியல் சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் ஓட்டல் தமிழ்நாடு வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் டி.பி.ஓ. அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். ஆகவே கமர்சியல் சாலையில் அடையார் ஆனந்த பவன் போகும் சாலையில் இரு பக்கமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பணிகளை சீசன் இல்லாத நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story