மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்
வாணியம்பாடி அருகே மின்கம்பத்துடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சிக்குட்பட்ட பீர்ஜி தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீர்ஜி தெருவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மின்கம்பத்துடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் கட்டியவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story