தெருவில் ஆறாக ஓடிய சாக்கடை கழிவுநீர்; பொதுமக்கள் அவதி


தெருவில் ஆறாக ஓடிய சாக்கடை கழிவுநீர்; பொதுமக்கள் அவதி
x

நெல்லை டவுனில் தெருவில் சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுனில் தெருவில் சாக்கடை கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

சாக்கடை கழிவுநீர்

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ஆனி தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி 4 ரத வீதிகளிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொக்கப்பனை முக்கு மற்றும் கோவில் முன்பு உள்ள அனுப்பு மண்டபம் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை கொண்டு அடைத்து போக்குவரத்தை திருப்பி விட்டுள்ளனர்.

இதனால் ரத விதிகளுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் அம்பாள் சன்னதி தெரு மற்றும் ஏ.பி.மாடத்தெரு வழியாக செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஏ.பி.மாடத் தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அடைந்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து சாக்கடை வடிகாலில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கி தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுத்தனர். நெல்லையப்பர் கோவில் திருவிழா நடைபெறும் இந்த நேரத்தில் சாக்கடை ரோட்டில் பெருகி ஓடாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் டவுன் ஏ.பி.மாடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதனால் பொது மக்களுக்கு மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குடிநீர் குழாயில் சாக்கடை கலக்கும் பகுதியை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story