கழிவுநீர் கால்வாய் பணியை துரிதப்படுத்த வேண்டும்
சோளிங்கர் பள்ளி பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் தபால் அலுவலக தெருவில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் வழிந்தோடுகிறது. சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story