குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் மீது வழக்கு
குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்
குறிஞ்சிப்பாடி அருகே சந்தைவெளிபேட்டையை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவள் அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இவள் தனது அண்ணனுடன் ஆபத்தாணபுரத்தில் உள்ள நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணுதோப்பை சேர்ந்த 15 வயது சிறுவன், அந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த சிறுமியின் தாய் நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story