சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-1 மாணவன் கைது
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-1 மாணவன் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது மாணவி. இவர் தொடக்கப்பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து புழுதிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story