சிறுமிக்கு பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
விருதுநகர் பகுதியை சேர்ந்த 56 வயது நபர், தன்னுடைய உறவினர் மகளான சிறுமியை வளர்த்து வந்தார். இந்தநிலையில் அவரும், 25 வயது வாலிபரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து 1.9.2020 அன்று விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை மற்றும் வாலிபர் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.