சிறுமிக்கு பாலியல் தொல்லை; பிளஸ்-2 மாணவர் கைது
திருப்பரங்குன்றம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
திருப்பரங்குன்றம்
மதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதை சேர்ந்த ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவன் அவரது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயதை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவனின் பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர்.
இதேபோல மாணவியின் பெற்றோரும் மதுரையில் நடந்த திருவிழாவுக்கு சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு அந்த மாணவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தெரிந்த சிறுமியின் தாயார் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து போகசோ சட்டத்தின் கீழ் அந்த மாணவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story