சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு
புதுக்கடை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு ஆண்டாக சம்பவத்தை மறைத்த வாலிபர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
குளச்சல்:
புதுக்கடை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு ஆண்டாக சம்பவத்தை மறைத்த வாலிபர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
புதுக்கடை அருகே இனயம் ஹெலன் நகரை சேர்ந்தவர் கபிரியல் (வயது 75). இவர் 4 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்தது.
சிறுமியின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற அருள் (38) என்பவர் கபிரியலின் வீட்டுக்குள் சென்று பார்த் தார். இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த அருள் சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தையிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கடந்த 15-ந்தேதி கபிரியலிடம் சென்று ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
போக்சோ சட்டத்தில் வழக்கு
அதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை, குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கபிரியல் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியின் சத்தம் கேட்டு கபிரியலின் வீட்டுக்குள் சென்று அருள் பார்த்துள்ளார். இந்த சம்பவத்தை ஒரு ஆண்டாக மறைத்ததால் அருள் மீதும் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.