சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x

நெய்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள சின்னகாப்பான்குளத்தை சேர்ந்தவர் பரசுராமன் மகன் ரஞ்சித்குமார் (வயது 25). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகினார். அப்போது அவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.


Next Story