சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
மிட்டாய் வாங்கி கொடுத்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி
மிட்டாய் வாங்கி கொடுத்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அதில் 3-வது குழந்தையான 9 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டுக்கு மூத்த சகோதரரின் நண்பரான காந்திநகர் பகுதியை சேர்ந்த கேரட் மூட்டை தூக்கும் தொழிலாளி அஜித்குமார் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது அந்த சிறுமியுடன் பேசி பழகி வந்தார். மேலும் சம்பவத்தன்று சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து ஏமாற்றி அருகில் உள்ள சோலை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
போக்சோ சட்டத்தில் கைது
எனினும் அந்த சிறுமி, தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அஜித்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் அஜித்குமாரை மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன் முன் ஆஜர்ப்படுத்தி ஊட்டி சிறையில் அடைத்தனர்.