சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் சரக்கோடுவிளையை சேர்ந்தவர் வினித் (வயது 25). இவர் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 2017-ம் ஆண்டு வீரவநல்லூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட வினித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த வீரவநல்லூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story