சிறுமிக்கு பாலியல் தொல்லை:போக்சோவில் ஓட்டல் தொழிலாளி கைது
தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேனி
தேவதானப்பட்டி அருகே தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் பள்ளி மற்றும் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் சிறுமியிடம் விசாரித்தார். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மூப்பனூரை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான அரிகிருஷ்ணராஜ் (வயது 25) என்பவர் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார்.
மேலும் 9 வயதான தனது தங்கைக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதுகுறித்து விடுதி மேலாளர் ஜெயராணி தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அரிகிருஷ்ணராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story