சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஈரோடு அருகே உள்ள பி.பி. அக்ரஹாரம் அண்ணாநகர், முத்துவீதியை சேர்ந்தவர் சிராஜ்தீன் (வயது 54). இவர் கிரைண்டர் பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு 11 வயது சிறுமியை சிராஜ்தீன் தனது கடைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் வீட்டிற்கு அழைத்து சென்றும் பல முறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
5 ஆண்டு சிறை
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிராஜ்தீனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான தீர்ப்பு நேற்று கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சீராஜ்தீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.