மாணவிக்கு பாலியல் தொந்தரவு: முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை -மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை -மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர்

மதுரை தல்லாகுளம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் திரவியம் (வயது 75). இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டில் 5-ம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், அவரை தாக்கியும் உள்ளார்.

இதுகுறித்து தல்லாகுளம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திரவியத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார்.

5 ஆண்டு சிறை

விசாரணை முடிவில், திரவியம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story