சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது
x

கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாலியல் தொல்லை

கும்பகோணத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மேலக்காவிரி செக்கடித்தெருவை சேர்ந்த செல்வம் (வயது 65) மற்றும் முருகன் (55) ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் மற்றும் முருகன் இருவரும் அந்த சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசாா் விசாரணை நடத்தினர்.

கைது

இந்த நிலையில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் செல்வம் மற்றும் முருகன் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.


Next Story