தேனி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்; ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு


தேனி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்; ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 30 May 2023 2:30 AM IST (Updated: 30 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

அதன்படி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி புதிய பஸ் நிலையத்தில் பொது கழிப்பறை சுகாதாரமின்றி உள்ளது. கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே அதனை தடுக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் பூங்காவை திறக்க வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் பொது கழிப்பறையில் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை மற்றும் இருக்கை வசதியும் செய்து தர வேண்டும். நகராட்சியில் 13-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையுடன் இணைக்காத பகுதிகளை பாதாள சாக்கடையுடன் இணைக்க வலியுறுத்தி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.


Next Story