சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

எட்டயபுரம் அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள நற்கலைக்கோட்டை கிராமத்திலுள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் மஹா கணபதி பூஜை, புண்ணியாகவாஜனம், நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தனம், யாத்ராதானம், தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் சித்தி விநாயகர் சன்னதியின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது இதனையடுத்து விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருநீறு உள்ளிட்ட பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனைநடந்தது. இந்த விழாவில் எட்டயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக பால் குட ஊர்வலம் நடந்தது


Next Story