கோவில்பட்டி புற்று கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை


கோவில்பட்டி புற்று கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி புற்று கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story