கோதண்டராமர் கோவிலில் சனி வார விழா
கோதண்டராமர் கோவிலில் சனி வார விழா நடந்தது.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
கோதண்டராமர் கோவிலில் சனி வார விழா நடந்தது.
தேசூர் பாடசாலை தெருவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கியபின் வரும் 5-ம் சனி வார விழா நடந்தது. இதனையொட்டி காலையில் கோதண்ட ராமர், சீதாதேவி லட்சுமணருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், துளசி ஆகியவை மூலம் திருமஞ்சனம் செய்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் உற்சவர்களை டிராக்டரில் எழுந்தருள செய்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், நாதஸ்வரம் மற்றும் பஜனை கோஷ்யுடன் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவிலை தோரணம் கட்டி, மா கோலம் போட்டு தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை தென்திண்ணலூர் பால்காரர் வெங்கடேசன், சவுபாக்கியம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story