சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் ஆடித்தபசு


சங்கரலிங்கம் சுவாமி   கோவிலில் ஆடித்தபசு
x

பேய்க்குளம் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

பேய்க்குளம் சங்கரலிங்கம் சுவாமி உடனுறை கோமதி அம்மாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஆக.10-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கணபதி ஹோமம், சுவாமி சிறப்பு பூஜை, தொடர்ந்து கொடியேற்றம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அக.9-ந் தேதி மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜையும், ஆக.10-ந் தேதி காலை 5மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு அலங்கார பூஜை, காலை 9 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 5மணிக்கு சீர் வரிசையுடன் அம்பாளை அழைக்க செல்லுதல், இரவு 7 மணிக்கு தபசுக்காட்சி நடைபெற்றது. இரவு 10மணிக்கு சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம், இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் நகர் வலம் வருதல் ஆகியவை நடைபெற்றது.


Next Story