சங்கராபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சங்கராபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, முதல் காலயாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, சுகாசினி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, சன்னவதி ஹோமங்கள், சாமி சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 4- கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஆரிய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.