சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு


சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு
x

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடகாலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு- சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு

தூத்துக்குடி

சாயர்புரம்:

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடகாலில் பாசனத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வடகாலில் திறக்கப்பட்ட தண்ணீர் சீராக வருகிறதா? என நேற்று சண்முகையா எம்.எல்.ஏ. குலையன்கரிசல் பஞ்சாயத்தில் உள்ள போடமாள்புரம் மடைப்பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் பொறியாளர் பாஸ்டின்வினோ, சேர்வைகாரன்மடம் விவசாய சங்கத் தலைவர் பொன்ராஜ் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Next Story