சொக்கநாத சுவாமி கோவில் திருத்தேர் நிறுத்துமிடத்தில் கொட்டகை வசதி


சொக்கநாத சுவாமி கோவில் திருத்தேர் நிறுத்துமிடத்தில் கொட்டகை வசதி
x

சொக்கநாத சுவாமி கோவில் திருத்தேர் நிறுத்துமிடத்தில் கொட்டகை வசதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகரில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள சொக்கநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் பங்களிப்புடன் திருத்தேர் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2020 மற்றும் 2021-ல் கொரோனா பாதிப்பு காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஆவணி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இருந்தபோதிலும் திருத்தேர் நிறுத்தப்படும் இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லாதிருந்த நிலையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் திருத்தேருக்கு கண்ணாடி கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.



Next Story