ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்


ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்
x

ஆம்பூர் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர் டவுன் கம்பிக்கொல்லை அருகே செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூர் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.

அதில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story