அன்னவாசல் பகுதியில் குர்பானிக்கு தயாராகும் செம்மறி ஆடுகள்
பக்ரீத் பண்டிகையையொட்டி அன்னவாசல் பகுதியில் குர்பானி கொடுப்பதற்காக செம்மறி ஆடுகள் இறக்கப்பட்டுள்ளது.
இன்று பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்றான தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அன்னவாசல் பகுதிகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதனை தொடர்ந்து அவரவர் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி கொண்டாடுவர்.
செம்மறி ஆடுகள்
இந்த பண்டிகையின் போது பலியிடுவதற்காக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், காலாடிப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், குடுமியான்மலை, வயலோகம் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிக அளவு வசிக்கும் பகுதிகளில் குர்பானிக்காக அதிக அளவு செம்மறி ஆடுகள் இறக்கப்பட்டுள்ளது.