சிவசேனா மாநில நிர்வாகிகள் கூட்டம்
சிவசேனா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
சிவசேனா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயல் தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் சாமி சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவதை கண்டிக்கிறோம். இனி இதுபோல் நடைபெற்றால் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட அறிவிப்பில் உள்ள விதிமுறைகளில் உள்ள முரண்பாடுகளை தமிழக அரசு களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story