சிவன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்
சிவன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அசோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிவகாசி துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் சத்தியசீலன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அசோகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- சிவகாசி சிவன் கோவில் கும்பாபிஷேகம் 3 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் தாமதமாக நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். திருப்பணிகள் தொடங்கிய பின்னர் மாதம் ஒரு முறை அதற்கான ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் தலைமையில் நடைபெறும். ஒரு வருடத்திற்குள் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி செல்வம் பட்டர் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். முடிவில் சுப்பிரமணியபட்டர் நன்றி கூறினார்.