சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த சிவலிங்கம்


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த சிவலிங்கம்
x

வந்தவாசி அருகே சாலை விரிவாக்க பணியின்போது மிகப்பெரிய சிவலிங்கம் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே சாலை விரிவாக்க பணியின்போது மிகப்பெரிய சிவலிங்கம் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பணியாளர்கள் சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டினர். அப்போது வேப்பமரத்தடியில் மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் அந்த சிவலிங்கத்தில் பிரம்ம சூத்திர குறியீடு காணப்பட்டது. இந்த வகை சிவலிங்கம் மிகவும் பழமையானதாக கூறப்படுகிறது. மேலும் 8-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பொதுமக்கள் வழிபாடு

இதையடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

மேலும் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு மருந்தீஸ்வரர் என பெயிரிட்டு பொதுமக்கள் வழிபட்டனர். இதையடுத்து அங்கு கோவில் கட்டப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.




Next Story