சிவகுருமூர்த்தி கோவிலில் மகா சிவராத்திரி விழா


சிவகுருமூர்த்தி கோவிலில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி சிவகுருமூர்த்தி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி கிராமத்தில் சிவகுருமூர்த்தி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் 108 சங்கு அபிஷேகம் 108 படையல் பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அர்ஜூனன் தபசு நாடகம் நடந்தது. அப்போது அர்ஜூனன் வேடம் அணிந்தவர் தபசு மரத்தில் ஏறி அமர்ந்து புரான கதைகளை பாடினார். உச்சியை சென்றடைந்தபோது கருடன் மேலே பறந்தது. இதையடுத்து வேடமணிந்த நபர் அங்கிருந்து மலர்களை தூவினார். இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story