சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்


சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:30 AM IST (Updated: 14 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

சிவசைலநாதர் கோவில்

ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பரமகல்யாணி அம்மன் உடனுறை சிவசைலநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் கற்பகவிருட்சம், காமதேனு, பூதம், சிம்மம், ரிஷப வாகனம், பூம்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதிஉலா வந்தனர். 8-ம் திருநாளன்று நடராஜருக்கு வெள்ளைச்சாத்தி, பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஆழ்வார்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். சுவாமி தேரை ஆண்கள், பெண்கள் இழுத்தனர். அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்.

இதில் கடையம், பொட்டல்புதூர், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளுகின்றனர். இரவு 10 மணிக்கு தீர்த்தவாரியும், அதை தொடர்ந்து சுவாமி-அம்பாள் அத்ரி மகரிஷிக்கு காட்சியளிக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், தக்கார் ரேவதி, ஆய்வாளர் சரவணக்குமார் செய்து இருந்தனர்.


Next Story