லூப் லைன் பிரச்சினை: சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயிலில் பராமரிப்பு பணியின் போது சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிர்ச்சி
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரெயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது ரயில் லூப் லைனுக்கு மாறியபோது, பின் சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை,
சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் மின்கம்பிகள் பராமரிப்பு பணி மேற்கொண்ட ரெயில் பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது. அங்கு லூப் லைனுக்கு மாறிய போது, ரெயிலின் பின்புற சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. தகவல் அறிந்த ரெயில்வே கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இயந்திரங்களின் உதவியுடன் மீண்டும் தண்டவாளத்தில் ரெயிலை ஊழியர்கள் நிலை நிறுத்தினர். இதனால் ரயில் சேவையில் பெரிய பாதிப்பு இல்லை எனவும் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரெயில்கள் சற்று காலதாமதாக இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து ரெயில்கள் தடம் புரளும் சம்பவங்களால் ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story