கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து சாவு
செங்கோட்டையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கார் டிரைவர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை (வயது 58).
இவர் செங்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி கல்யாணி (50). இவர்களது மகன் சங்கர் (30).
நெஞ்சுவலியால் பலி
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல் மாயாண்டி தனது காரை பஸ் நிலைய பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்தார். சுமார் 11 மணி அளவில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது மகன் சங்கர், செங்கோட்ைட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாயாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து தனது தந்தையின் உடலை சங்கர் வீட்டிற்கு கொண்டு வந்தார்.
மனைவியும் சாவு
கணவர் இறந்த அதிர்ச்சியில் கதறியபடி இருந்த கல்யாணி திடீரென்று மயங்கி தனது கணவர் உடல் மீது விழுந்தார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
செங்கோட்டையில் கணவா் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.