ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா


ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா
x

புள்ளவராயன்குடிகாடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தார். விழாவில் ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் கூறிய மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பரிசுகளை ஒன்றியக்குழு உறுப்பினர் அனிதா மாதவன், ஊராட்சி தலைவர் துரைக்கண்ணு, ஊராட்சி துணைத்தலைவர் பாஸ்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வித்யா ஆகியோர் வழங்கினர். முன்னதாக தலைமை ஆசிரியர் அருள் வரவேற்றார். முடிவில் ஆசிரியை கமலா நன்றி கூறினார்.


Next Story