போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
வடமதுரை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்
வடமதுரை அருகே புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கரிவாடன்செட்டிபட்டியில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் உள்ளது. இங்கு போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடந்தது.
திண்டுக்கல் புறநகர், வேடசந்தூர் சப்-டிவிஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதி தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது.
இதன் எதிரொலியாக ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story